Folge uns
iBookstore
Android app on Google Play
Gefällt mir
Ein Programm der Universität Leiden
கோள் ஒன்றை மறைப்பது எப்படி
15. April 2016

நூறு வருடங்களுக்கும் மேலாக நாம் பூமியைத் தாண்டி ஏதாவது உயிர்கள் இருகின்றனவா என்று தேடிக்கொண்டே இருக்கின்றோம். ஆனாலும் இதுவரை வேற்றுலக உயிரினங்களை நாம் கண்டறியவில்லை, காரணம் இந்தப் பிரபஞ்சவெளி அளவில் மிகப்பெரியது என்பதால் இன்னும் எண்ணிலடங்கா இடங்களை நாம் தேடத் தொடங்கவே இல்லை.

எப்படியிருப்பினும், வேற்றுலக உயிரினங்களின் தேடல் எம்மிடத்தில் ஒரு முக்கியமான கேள்வியை உருவாக்கியுள்ளது – எம்மைப் போலவே வேற்றுலகவாசிகள் நம் பூமியைத் தேடினால் என்னவாகும்? அவர்கள் எம்மைக் கண்டுபிடிக்க நாம் விரும்புவோமா?

வேற்றுலகவாசிகள் E.T அல்லது Stitch போன்ற திரைப்படங்களில் அல்லது தொலைக்காட்சித் தொடர்களில் வந்த வேற்றுலக உயிரனங்கள் போல நல்லவையாக இருக்குமே என்று நாம் எண்ணினாலும், பெரும்பாலும் எமக்கு அருகில் இருக்கும் வேற்றுலகவாசிகள் Toy Story கார்ட்டூனில் வரும் ‘நல்லவன்’ Buzz Lightyear போலல்லாமல் உலகை அழிக்க வரும் ‘வில்லன்’ Evil Emperor Zurg போல இருக்கலாம்! பிரபஞ்சவெளியில் வேகமாக பயணிக்கக் கூடிய விருத்தியடைந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு, எமது உலகையும், உயிரினங்களையும் அவர்களால் சிதைத்துவிடமுடியும்!

ஆகவே நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டிய சூழல் வந்துவிட்டது: நாம் தொடர்ந்து எங்கிருக்கிறோம் என்று பிரபஞ்சத்திற்கு ஒளி/ஒலி பரப்பு செய்வதா? இல்லை எல்லாவற்றையும் மறைத்துவிட்டு பாதுகாப்பாக மறைவாக வாழ்வதா? ஒரு முழுக்கோளையும் மறைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. ஆனால் முழுக்கோளையும் மிகச்சக்திவாய்ந்த லேசர்களைக் கொண்டு மறைப்பதற்கான உத்தியை நாம் கண்டறிந்துள்ளோம்.

மற்றைய விண்மீன்களைச் சுற்றிவரும் கோள்களைப் படம் பிடிப்பது மிகக்கடினம் காரணம் அவை மிகச் சிறியவை, ஆகவே நேரடியாகப் படம் பிடிப்பதை விட்டுவிட்டு வேறு புத்திசாலித்தனமான முறைகளைக் கொண்டு கண்டறியவேண்டும். உதாரணமாக, ஒரு கோள் அதனது தாய் விண்மீனைச் சுற்றிவரும்போது அது விண்மீனின் ஒளியை சிறிதளவு மறைப்பதால், இங்கிருந்து பார்க்கும் போது குறித்த விண்மீனின் பிரகாசம் குறைகிறதா என்று அவதானிப்பதன் மூலம் குறித்த விண்மீனைச் சுற்றி கோள்கள் இருகின்றனவா என்று அறியமுடியும்.

வேற்று விண்மீன் கோள்களைக் கண்டறிய மிகவும் சிறந்த முறையாக இது விளங்குகிறது. இதுவரை 2000 இற்கும் அதிகமான வேற்றுவிண்மீன் கோள்களை நாம் கண்டறிந்துள்ளோம், அதில் பாதிக்கும் அதிகமானவை இந்த முறையைப் பயன்படுத்தியே கண்டறியப்பட்டது.

எமக்கு வேற்றுலகவாசிகள் எங்கிருக்கிறார்கள் என்று தெரிந்தால், அவர்கள் நமது பூமி சூரியனைக் கடக்கும் போது சூரியனின் பிரகாசம் குறைவதை அவதானிப்பதை தடுப்பதற்கு அவர்களை நோக்கி பிரகாசமான லேசர் கற்றைகளை செலுத்தமுடியும்!

வெற்றிகரமாக பூமியை மறைப்பதற்கு, வேற்றுலகவாசிகளை நோக்கி ஒரு வருடத்திற்கு பத்து மணிநேரம் சக்திவாய்ந்த லேசர் கற்றைகளை செலுத்தவேண்டும். (இது பூமி சூரியனைக் கடக்க எடுக்கும் நேரம்). இதற்குப் பயன்படும் லேசரை இயக்கத் தேவையான சக்தி அண்ணளவாக ஒரு வருடத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் சேகரிக்கும் சக்திக்குச் சமமாகும்!

எப்படியிருப்பினும், குறித்த வேற்றுலகவாசிகளோடு தொடர்புகொள்ளவேண்டும் என்று நாம் கருதினால், குறித்த லேசர்களை நாம் அதற்கும் பயன்படுத்தலாம். இந்த லேசர் கற்றைகளைப் பயன்படுத்தி தகவல்களையும் அனுப்பலாம்.

ஆகவே உங்கள் கருத்து என்ன? நாம் வேற்றுலகவாசிகளோடு தொடர்புகளை ஏற்படுத்தவேண்டுமா? அல்லது அவர்களிடம் இருந்து மறைந்துவாழ வேண்டுமா?

ஆர்வக்குறிப்பு

நாம் இங்கு கூறியுள்ள லேசர் வெறும் கட்புலனாகும் ஒளியில் மட்டுமே கற்றைகளைச் செலுத்தும். ரேடியோக் கதிர்கள் தொடக்கம் காமாகதிர்கள் வரை மொத்த மின்காந்தஅலைவீச்சில் கதிர்களைச் செலுத்துவதற்கு மேலும் 8 மடங்கு சக்தி தேவைப்படும்!

M Sri Saravana, UNAWE Sri Lanka

Share:

Mehr Neuigkeiten
14 September 2020
10 September 2020
3 September 2020

Bilder

Wie man einen Planeten versteckt
Wie man einen Planeten versteckt

Printer-friendly

PDF File
1,1 MB